தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்கிடையே மோதல்.!

தாய்லாந்து, கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, கம்போடியா இடையே எல்லை பிரச்னைக் காரணமாக மோதல் ஏற்பட்டது. இந்த, மோதலில் 43 பேர் உயிர் மாய்க்கப்ட்டனர்.

இதுதொடர்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்ட நிலையில், மீண்டும் இரு நாடுகளிடையே போர் ஏற்பட்டது. இதுகுறித்து, அதிபர் டிரம்ப் அறிக்கை ஒன்று வெளியிட்டார்.

இந்த, அறிக்கையில் அவர் மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதில், மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியாகக் கூறினார்.

மேலும், இரு நாடுகளும் அமைதிக்குத் தயாராக உள்ளனர் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *