ஜந்தர் மந்தரில் மோதல் – போராட்டக்காரர்கள் – நிகங் சீக்கியர்கள் மோதல்!

தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினருக்கும், அங்கே வந்துள்ள நிகங் சீக்கியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

நீட் முறைகேட்டைக் கண்டித்துத் தில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சியினர், மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திங்களன்று நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற இளைஞர்களைக் காவல்படையினர் கடுமையாகத் தாக்கினர்.

அதன்பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போராட்டக் களத்துக்கு வந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் போராட்டம் பரவியுள்ளது.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் வாள், வேல் ஆகியவற்றை ஏந்திய நிகங் சீக்கியர்கள் தில்லி ஜந்தர் மந்தருக்கு வந்துள்ளனர். அவர்கள் காவல்துறையின் தாக்குதலில் இருந்து போராட்டக்காரர்களைக் காத்து வருவதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் நிகங் சீக்கியர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் சிலரும், காவல்துறையினரும் தலையிட்டுச் சமாதானம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *