
நீட் தேர்வை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்துப் போராடுவது அரசியல் கேலிக்கூத்து என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் விமர்சித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நீட் தேர்வு என்ற சொல்லையே நாட்டுக்கு அறிமுகப்படுத்திய காங்கிரஸ் இன்று அதை எதிர்த்துப் போராடுவது அரசியல் கேலிக்கூத்து என்று கூறியுள்ளார். தமிழகத்தில் அனுமதியின்றி மாணவர்கள் போராடினால் அடக்குமுறை ஏவப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது மாணவ, மாணவியரைத் தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியே தவிர, அவர்களின் நலனைக் காக்கும் போராட்டம் அல்ல என்பதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்றும் தினகரன் கூறியுள்ளார்.



