நீட் ரத்து செய்தால் பா.ஜ.க உடன் கூட்டணி என சொல்ல முடியுமா? ஸ்டாலின் – இ.பி.எஸ் விவாதம்

Advertisements

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.மேலும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “எனது துறைக்கு குறைவான நிதி மட்டுமே ஒதுக்கப்படுகிறது. நிதி, திறன் மற்றும் அதிகாரம் உள்ளவர்களிடம் கேட்க வேண்டியதைக் கேட்டால் கிடைக்கும்” என்று பதிலளித்தது உள்ளிட்ட இன்றைய முக்கிய சட்டப்பேரவை நிகழ்வுகள் விவாதங்களைத் தொகுத்து தருகிறோம்.

அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று நீட் விவகாரம் தொடர்பாக பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மத்தியில் காங்கிரஸ் உடன் தி.மு.க கூட்டணி ஆட்சி இருந்தபோதுதான் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி கொடுத்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த தி.மு.க அதனை நிறைவேற்றியதா? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?” என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் விவகாரம் தொடர்பாக வாக்குறுதி கொடுத்தீர்களே.. என்று கேட்கிறீர்கள். அதனால்தான், சிக்கல் வந்தது என்கிறீர்கள். இப்போது, அந்த சிக்கலைத் தீர்த்து வைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று உங்களால் சொல்ல முடியுமா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதை நாங்கள் மறுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால், நிச்சயம் அதனை செய்திருப்போம். ஆனால், இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே. இந்த நிபந்தனையைப் போட்டு அதை நிறைவேற்றினால் தான் கூட்டணி என அறிவிப்பீர்களா என்றுதான் கேட்கிறேன். 2026-ம் ஆண்டில் என்ன, 2031-ல் கூட கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது கூட்டணி அமைத்திருக்கிறீர்களே, இது ஏமாற்றுவேலையல்லவா? என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி கேள்வி எழுப்பினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *