தமிழகத்திற்குள் மீண்டும் வந்தது கொரோனா..சென்னையில் 3 பேருக்கு வைரஸ் தொற்று..!

Advertisements

2020 உலகம் முழுக்க கொரோனா என்ற வைரஸ் தொற்று பரவியது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் 3 பேரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டிய கொரோனா மீண்டும் தமிழகத்தில் கால் பதித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சென்னையில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. தொற்று பாதிப்பு பெரிதாக யாருக்கும் கண்டறியப்படவில்லை. இந்தநிலையில்தான் தற்போது மூன்று பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.32 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், ஒரு பெண் உள்பட 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களின் உடல் நலம் நன்றாக இருப்பதாக பொது சுகாதரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *