கே.என்.நேரு சொன்னது கட்டுக்கதை – துரை வைகோ அதிரடி!

நான் திமுகவில் இணைய விரும்பியதாகக் கே.என்.நேரு கூறியது முற்றிலும் கட்டுக்கதை என்று மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுகவின் அச்சறுத்தலுக்கு நான் அஞ்சப்போவதில்லை என்றும், தன்னை அடிக்க அடிக்க இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் தெரிவித்தார். மேலும், நான் திமுகவில் இணைய விரும்பியதாகக் கே.என்.நேரு கூறியது முற்றிலும் கட்டுக்கதை என்று கூறினார். மதிமுகவை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்தார். கே.என்.நேரு திருச்சியில் இருந்த திமுகவின் முக்கியப் புள்ளிகளை காலி செய்தவர் என்று குற்றம்சாட்டினார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் தெரியாது, கலைஞர் காலத்துடன் திமுக முடிந்துவிட்டது என்று கே.என்.நேரு கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *