4 நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கும் முதலமைச்சர் விஜய்!

முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் அடுத்த மாதம் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில், சத்தியபாமாவும் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில், வருகிற 20 ஆம் தேதிக்கு பிறகு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

 

இதையடுத்து, முதலமைச்சர் விஜய் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளிலும் தலா 2 நாட்கள் என 4 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தாராபுரத்தில் வருகிற 25 ஆம் தேதியும், அடுத்த மாதம் 2 ஆம் தேதியும் விஜய் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாராபுரம்  திருமலைபாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. ஆளும் கட்சியான பிறகு முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்பதால் பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *