தமிழகத்தில், இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில், இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று பெய்த மழையால், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் அதிகபட்சமாக, 10 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று, இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்புள்ளது.

கோவை, நீலகிரி, தென்காசி மாவட்டங்களில் ஓரு சில இடங்களில், இன்று கன அல்லது மிக கனமழையும் திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *