இந்தியாவால் பீதியான பாகிஸ்தான்..! திடீர் ஏவுகணை சோதனை நடத்துவது ஏன்?

Advertisements

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்கிடுமோ என்று பாகிஸ்தான் அஞ்சி நடுங்குகிறது. அதோடு இந்தியாவை சமாளிக்க வேண்டும் என்பதற்காக கராச்சியில் ஏவுகணை சோதனையை தொடங்கி உள்ளது.பாகிஸ்தானையும், பயங்கரவாதிகளையும் பிரிக்க முடியாத நிலை உள்ளது. நம்மிடம் இருந்து தனியாக பிரிந்து அண்டை நாடாக இருந்தாலும் கூட பாகிஸ்தான் என்பது பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக உள்ளது.

சுற்றுலா பயணிகள் உயிருக்கு பயந்து தங்களை விட்டு விடும்படி கூறினாலும் கூட பயங்கரவாதிகள் கேட்காமல் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இந்த கொடூர தாக்குதலுக்கு எல்இடி எனும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளையாக செயல்படும் ‛தி ரெசிஸ்டென்ட் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது இந்த தாக்குதல் நடந்த பிறகு பிரதமர் மோடி சவூதி பயணத்தை பாதியில் கைவிட்டு இந்தியா திரும்பினார். மத்திய பாதுகாப்புத்துறை, உள்துறை, வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டர். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பல முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின்போது பயங்கரவாதிகளின் தாக்குதல் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாகிஸ்தானின் இந்த திடீர் ஏவுகணை சோதனையை நம் நாடு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதோடு இது நம் நாட்டுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது நம் நாடு. ஏனென்றால் ஏற்கனவே பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. இப்போது ஏவுகணையை பாகிஸ்தான் கையில் எடுத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *