
மகாராஷ்டிரா மாநிலம் புனே மற்றும் மும்பை சுற்றுவட்டார பகுதிகளில் குய்லின்-பாரே சிண்ட்ரோம் (GBS) என்ற நரம்பியல் கோளாறு கடந்த மாதம் முதல் பரவி வருகிறது. இந்த நோய் மனிதர்களின் மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியே உள்ள நரம்புகளைப் பாதிக்கிறது.
கை, கால்கள் மரத்துப் போதல், நீடித்த வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த நோய் பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. அறிகுறிகள் தெரிந்தவுடன் நரம்பியல் மருத்துவரை அணுகுவது அவசியமாகும்.
இந்நிலையில், GBS நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மேலும் இரண்டு பேருக்கு GBS நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சந்தேகிக்கப்படும் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட GBS பாதிப்புகளின் எண்ணிக்கை 205 ஐ எட்டியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மாநிலத்தில் GBS நோயால் இதுவரை 8 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
