M.K. Stalin: வேதனை!

Advertisements

கருத்து கூறுபவர்களை பாஜக அரசு மிரட்டுவதாக வேதனை!

சென்னை: எமர்ஜென்சியின் போது ஆட்சியை விட ஜனநாயகத்திற்கே ஆதரவு என கூறியவர் கலைஞர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி இல்ல திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.M.K. Stalin

அப்போது பேசிய அவர், 1967-ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று அண்ணா முதல்வரானார். இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்க்க கூடாது என டெல்லியில் இருந்து தூது வந்தது. ஜனநாயகத்திற்காக எமர்ஜென்சி நிலையை எதிர்த்து ஆட்சியை இழந்தது திமுக என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.மேலும்  என்ன செய்தாலும் பா.ஜ.க. தோல்வியை தவிர்க்க முடியாது, I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா, மக்களாட்சி நீடிக்குமா என்ற நிலையில்தான் இன்றைக்கு சூழல் அமைந்திருக்கிறது. தனக்கு எதிராக கருத்து கூறுபவர்களை ஒன்றிய பாஜக அரசு மிரட்டுகிறது என்று முதல்வர் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *