
பழனியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி திவான் மைதீன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வரும் ஞாயிற்றுக்கிழமை 16-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பழனி மின்வாரிய அலுவலக சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தைப்பூசத்தை அடிப்படையாகக் கொண்டு, எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல எனக் கூறி, காவல் நிலையத்தின் உத்தரவை ரத்து செய்து, 16-ந்தேதி மாலை அதே இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி தனபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
