Armstrong : ஆம்ஸ்ட்ராங் படுகொலை! அதிமுக பெண் நிர்வாகி அதிரடி நீக்கம்!

Advertisements

சென்னை திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அதிமுக இணை செயலாளராக இருந்தவர் மலர்கொடி. பகுஜ்ன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைதான அதிமுக நிர்வாகிக மலர்கொடி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் . அதிமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மலர்க்கொடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி சேகர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கியுள்ளார்.  மேலும் கழகத்தினர் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூரில் தனது வீட்டிற்கு வெளியே மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அன்று இரவே 8 பேர் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனை தொடர்ந்து மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை 5 நாள் காவலில் எடுத்து செம்பியம் காவல்துறையினர் விசாரித்தனர். சரணடைந்த ரவுடிகளில் ஒருவரான திருவேங்கடம் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *