
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
பன்னிரெண்டாவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின்
முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஐந்து முறை சாம்பியனான தென்கொரியாவுக்கு அதிர்ச்சி அளித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா நாட்டிற்கு பெருமை சேர்க்கும்
தருணம் என பிரதமர் மோடி கூறினார்.


