அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் எஸ்.ஜெய்சங்கர் ஆலோசனை!

Advertisements

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் நடந்தது. இதில் அந்தந்த நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாகப் பதவியேற்ற மார்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்தது.

அதேபோல் மார்கோ ரூபியோவை ஆஸ்திரேலியா மந்திரி பென்னி வோங், ஜப்பான் மந்திரி இவாயா தகேஷி ஆகியோரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து எஸ்.ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, வாஷிங்டனில் பயனுள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

பெரியதாகச் சிந்திப்பது, நிகழ்ச்சி நிரலை ஆழப்படுத்துவது மற்றும் எங்கள் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம்.

இன்றைய சந்திப்பு, நிச்சயமற்ற மற்றும் நிலையற்ற உலகில், குவாட் உலக நன்மைக்கான ஒரு சக்தியாகத் தொடரும் என்பதற்கான தெளிவான செய்தியை அனுப்புகிறது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *