வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தடைந்தார் ஸ்டாலின்..!

Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்தடைந்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 30 ஆம் தேதி சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு புறப்பட்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களைச் சந்தித்தார்.

பின்னர் அவர், ஜெர்மனிப் பயணத்தை முடித்துக் கொண்டு இலண்டன் சென்று அந்நாட்டு மந்திரியையும், நாடாளுமன்றத் துணைச் செயலாளருமான கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்தார்.

தொடர்ந்து பல்வேறு துறைகளில் தமிழ்நாடும், இங்கிலாந்தும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்தார்.

இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் ஐரோப்பியப் பயணத்தை முடித்துக்கொண்டு இலண்டனிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு இன்று காலை சென்னை விமானம் நிலையத்திற்கு வந்தடைந்தார்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், திமுகவினரும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *