ஹைட்ரோ கார்பன் அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? – அன்புமணி கேள்வி

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுக்கான அனுமதியை ரத்து செய்யாதது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி வினவியுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளித்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்து 15 நாள் ஆவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அளித்த அனுமதியை இன்று வரை திரும்பப்பெறாததைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி, உழவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே திமுக அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அனுமதியை ரத்து செய்யவில்லை என்றால் ஓ.என்.ஜி.சி நிறுவனம் கிணறு அமைக்கும் பணிகளை எந்த நேரமும் மீண்டும் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதைத் தடுக்க முடியாது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *