டில்லியில் நவம்பர் 20 மற்றும் 21 -ல் செயற்கை மழை உருவாக்கப்போவதாக கான்பூர் IIT மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
தற்போது டில்ல்லியில் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால், டில்லி அமைச்சர்களான கோபால் ராய் மற்றும் அடிஷி ஆகியோருடன் கான்பூர் IIT மாணவர்களுடன், செயற்கை மழை உருவாக்குவதன் மூலம் காற்று மாசு பெருமளவில் தடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக டில்லியில் காற்று மாசு மோசமைடந்து உள்ள நிலையில், டில்லி அரசாங்கம் நவம்பர் 20 மற்றும் 21 தேதிகளில் காற்று மாசுவில் இருந்து விடுபடுவதற்கு உண்டான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் மற்றும் நிதி அமைச்சர் அடிஷி குழு, கான்பூர் ஐஐடி மாணவர்களுடன் இணைந்து அவசர கால நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடத்தியதில், ஐஐடி மாணவர்கள் உச்சநீதி மன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று இந்த முடிவு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஐஐடி குழு இது குறித்து தெரிவிக்கையில் 40 சதவீதம் மேகங்கள் இருந்தால் செயற்கை மழை உருவாக்கி காற்று மாசு குறைக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப் போவதாக தெரிவித்துள்ளனர்.