ஆபாச கமெண்ட் அடித்த நிக்சனுக்கு பதிலடி ரிப்ளை கொடுத்த வினுஷா!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிக்சன் தன்னை பற்றி சொன்ன ஆபாச கமெண்ட் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வினுஷா அவருக்கு தரமான பதிலடியும் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை வினுஷாவை, நிக்சன் உருவகேலி செய்து பேசியது நேற்றைய டாஸ்க்கின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது வினுஷாவை தான் தவறான அர்த்தத்தில் பேசவில்லை என்றும், அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை எனவும் நிக்சன் சப்பைக்கட்டு கட்டினார். இதனை விசித்ரா, அர்ச்சனா உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இது வினுஷாவுக்கே தெரியும் என கூறிவிட்டு எஸ்கேப் ஆனார் நிக்சன்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வினுஷா, நிக்சன் தன்னை உருவகேலி செய்து பேசியதை கண்டித்துள்ளதோடு, அவருக்கு தரமான பதிலடியும் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “தற்போது நான் பிக்பாஸ் வீட்டில் இல்லாவிட்டாலும், எனக்காக இதுகுறித்து பேசியாக வேண்டும். முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல ஒரு கனெக்ஷன் இருந்தது. நான் உண்மையாகவே அவரை என் தம்பியாக நினைத்தேன். அப்படி நினைத்து தான் அவரிடம் பழகினேன்.
ஆரம்பத்தில் அவன் என்னை கேலி செய்தபோது, ஜாலிக்காக தான் பண்ணுகிறான் என நான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் போகப்போக அவன் எல்லைமீறி பேச ஆரம்பித்தான். அப்போது அவனிடம் இதை நிறுத்த சொன்னேன். அவனுடைய நடவடிக்கைகள் என்னை கடுமையாக பாதித்தன. அதனை காரணம் காட்டி அவனை நாமினேட்டும் செய்தேன். அதையடுத்து ஒருநாள் என்னிடம் மன்னிப்பு கேட்டான். அதுவும் கேலி செய்ததற்காக தான், உருவ கேலி செய்து கமெண்ட் பண்ணியதற்காக அல்ல.
உருவகேலி செய்ததற்காக நிக்சன் என்னிடம் மன்னிப்பு கேட்கவே இல்லை. என்னுடமே இதுபற்றி கூறியதாக நிக்சன் சொன்னது பொய், அதுபற்றி எனக்கு தெரியாது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தான் அவன் இப்படியெல்லாம் பேசி இருக்கிறான் என்பதே எனக்கு தெரியும். இப்போது நிக்சன் அதற்காக மன்னிப்பு கேட்டதால் அவர் நல்லவனாகிவிட முடியாது. அந்த Bully கேங்கிற்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், என்னை கேலி செய்தது நிச்சயம் ஜோக் கிடையாது. கடந்த வாரம் உரிமைக்குரல் தூக்கிய பெண்ணியவாதிகள் எங்கே போனார்கள். எனக்காக குரல் கொடுத்த விச்சுவுக்கு நன்றி” என வினுஷா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.