Maharashtra:’மசூதிக்குள் புகுந்து உங்களை வேட்டையாடுவோம்..’ பாஜக எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல்!

Advertisements

இஸ்லாமியர்களை மசூதிக்குள் புகுந்து வேட்டையாடுவோம் என்று மகாராட்டிர பாஜக எம்.எல்.ஏ நிதேஷ் ரானாபொதுக்கூட்டத்தில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மத குரு மஹாந்த் ராம்கிரி மஹராஜ் என்பவர் கடந்த மாதம் இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் இழிவாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ராம்கிரி மஹராஜூக்கு ஆதரவாக பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவின் மகனும் மகாராஷ்டிர மாநிலம் கன்காவிலி[Kankavli] தொகுதி பாஜக எம்.எல்.ஏவுமான நிதேஷ் ரானே பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். ‘மதகுரு மஹாந்த் ராம்கிரி மஹராஜூக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களின் மசூதிகளுக்குள் புகுந்து உங்களை ஒவ்வொருவராக வேட்டையாடுவோம் [chun chun ke marenge]. இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று நிதேஷ் ரானே தெரிவித்தார். அவரின் பேச்சை கேட்டு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது தட்டி ஆரவாரம் செய்தனர்.

நிதேஷின் கருத்துக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நிதேஷ் பிரயோகித்த வார்த்தைகளுக்கு பாஜகவும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. பொதுவாழ்க்கையில், குறிப்பாக அரசியல் வாதிகள் இதுபோன்ற வார்த்தைகளைப் பிரயோகிக்கக் கூடாது என்று பாஜக செய்தி தொடர்பாளர் துஷின் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் நிதேஷ் மீது இரண்டு எப்.ஐ ஆர் கள் பதியப்பட்டுள்ளது. கடந்த காலங்களிலும் இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியதற்காக நிதேஷ் மீது வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *