உலகக் கோப்பை கால்பந்து – கேப் வெர்டேவை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி!

மியாமி நகரில் நடைபெற்ற 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கேப் வெர்டேவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி போராடி வெற்றிப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் 23 ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, கேப் வெர்டேவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில், அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் கேப் வெர்டேவை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

 

29-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி ஒரு கோலையும், மார்ட்டினஸ் 92-ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும் அடித்தனர். 111-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் அடித்த பந்தை கேப் வெர்டே அணியின் டைனி தடுக்க முயன்றபோது,  பந்து அவர் மீது பட்டு, கோல் கம்பத்திற்குள் நுழைந்து ஓன்கோல் ஆனது.  இந்த வெற்றியின் மூலம் அர்ஜென்டினா 32 ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *