Koramangala cafe fire accident: 4வது மாடியிலிருந்து குதித்த வாலிபர்!

உயிரைக் காப்பாற்றி கொள்ள 4வது மாடியிலிருந்து குதித்த வாலிபர்!

பெங்களூரு: பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள அடுக்குமாடி வணிக வளாகக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் 4வது மாடியில் பிரபலமான பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பாரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில் கட்டிடம் முழுவதுமாகத் தீப்பரவியுள்ளது.

கீழ் தளத்திலிருந்து மூன்றாம் தளம்வரை தீப்பரவிய நிலையில் நெக்ஸா கார் ஷோரூம் இருந்துள்ளது. இந்தத் தீ விபத்து ஏற்பட்ட உடனாக மேலே இருந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறும் பரபரப்பான காட்சிகள் வெளியாகியுள்ளது. சிலிண்டர் வெடித்த பிறகாகக் கார் ஷோரூமில் இருந்த கார்களும் பற்றி எரிய தொடங்கியது.

தீயை அணைப்பதற்காகச் சுமார் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகத் தீ விபத்து ஏற்பட்டபோது மேல் மாடியில் பலர் சிக்கி கொண்டனர். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்காக மேலே இருந்து கீழே குதிக்கும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் பலர் மேலே இருந்து குதித்து தங்களின் உயிரைப் பாதுகாத்து கொள்வதற்காகக் குதித்ததால் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தின் உள்ளே இருந்த அனைவரையும் மீட்டு விட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில் தொடர்ந்து ஒன்றரை மணி நேரமாகத் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *