திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு தொடர்பாக, தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்போம் என்று அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜேஸ்குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதனை எதிர்ப்போம் எனத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிப்போம் என்றார். அண்ணாமலையின் அரசியல் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கும் பதிலளித்தவர், தமிழகத்தை அனைவரும் வாழக்கூடிய சிறந்த மாநிலமாக மாற்றுவதே அரசியல் கட்சிகளின் நோக்கமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.



