போதைப்பொருள் கடத்தல்… அரசுக்கு EPS எச்சரிக்கை!

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது  தமிழகத்தில் தற்போது தெளிவான நிர்வாகம் இல்லை என்றும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

காவிரி விவகாரம் குறித்துப் பேசிய அவர், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய தண்ணீரைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழக வெற்றிக் கழகம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அக்கட்சி இன்னும் முறையான அமைப்பாகக்கூட உருவாகவில்லை என்றும், அவர்களுக்கு அதிர்ஷ்டவசமாக வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *