Advertisements

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜெர்சி மைதானத்தில் 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், அர்ஜென்டினா – ஸ்பெயின் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில், ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதன்மூலம், ஸ்பெயின் அணி உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய ஸ்பெயின் வீரர் பெரன் டொரஸ் போட்டியின் 106ஆவது நிமிடத்தில் ஒரு கோலை அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
Advertisements


