பிரான்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றது ஸ்பெயின்!

Advertisements
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள மைதானத்தில் 23ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதில், ஸ்பெயின் வீரர்கள் ஒயார்சபால் போட்டியின் 22ஆவது நிமிடத்தில் ஒரு கோலையும், 58ஆவது நிமிடத்தில் பெட்ரொ பேரோ ஒரு கோலையும் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தொடர்ந்து, நடப்பு தொடரில் இருந்து பிரான்ஸ் அணி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *