திருப்பரங்குன்றம் விவகாரம் – சசிகாந்த் செந்தில் காட்டம் !

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினர் வேண்டுமென்றே தமிழ்நாட்டில்  மதக் கலவர சிந்தனையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சேக்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆவடி நகர தலைவர் அமித் பாபு ஏற்பாட்டில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆவடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு தங்கள் பொறுப்புக்கான சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் கலந்து கொண்டு புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன சான்றை வழங்கினார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினர் வேண்டுமென்றே தமிழ்நாட்டில்  மதக் கலவர சிந்தனையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். இதை  தமிழர்கள் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.  திருப்பரங்குன்றம் விவகாரத்தை இதற்கு முன் தமிழகம் எப்படி கையாண்டதோ அதேபோல் கையாள வேண்டும் என்று கேட்டு கொண்டார். தமிழக வெற்றி கழக இன்னும் அதிக காலத்தில் நல்ல எண்ணங்களுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *