மீனவர்கள் போராட்டம் செய்யும் நிலையில், ஒரு நாளாவது அமைச்சர் வந்தாரா என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் எப்படி வாய் திறப்பது இல்லையோ, அது போல மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்தும் வாய் திறப்பதில்லை என்றும் சென்னை காசிமேட்டில் அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், ஆந்திர கடலோரபடையால் சிறைபிடிக்கப்பட்ட 8 விசைப்படகுகளை மீட்டு தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீனவர்கள் தொடர்வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மீனவர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது. மீனவர்களின் போராட்டம் வெற்றிப்பெற வாழத்துக்கள் என தெரிவித்தார்.மேலும், ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், மீனவர்கள் நலன் பாதுகாக்கப்பட்டது என்றும் இன்று உலக மீனவர்கள் தின வாழ்த்துகள் என்று சொல்லும் போது, மீனவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இருக்க வேண்டும், ஆனால் மகிழ்ச்சி இல்லை என்றும்,
த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்து தினம்தோறும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற நிலையாகிவிட்டது என்றும் தெரிவி;த்தார். மேலும், ஜோசப்விஜய்யை பார்க்க சென்று, பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம், மீனவர்களுக்கு 7 லட்சமா, மீனவர்களின் உயிர் கில்லுகீரையா என கேள்வி எழுப்பிய அவர், மீனவர்களுக்கு ரூபாய் 20 லட்சம் கொடுக்கவில்லை என்றால் த.வெ.விற்கு இனி ஒரு ஓட்டு கூட விழாது என்று அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


