குஸ்தி கற்றால் தன்னம்பிக்கை – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

குஸ்தி கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை கிடைக்கும் என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் உள்ள தனியார் திரையரங்கில் கட்டா குஸ்தி 2 திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். நடிகர் விஷ்ணு செய்தியாளர்களிடம் பேசியபோது, கட்டா குஸ்தி 2  படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் இந்த வாரம் முழுவதும் படத்தின் பிரமோஷன் காக ஒவ்வொரு ஊராக சென்று வருவதாகவும் கூறினார்.
இயக்குனர் செல்ல அப்பா பேசுகையில், தான் தஞ்சாவூரை சேர்ந்தவன் என்பதால் முதல் காட்சி தஞ்சாவூர் மக்களுடன் பார்க்க வந்துள்ளதாகத் தெரிவித்தார். கட்டா குஸ்தி முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இரண்டாவது படம் எடுத்துள்ளதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசியபோது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கக்கூடிய திரைப்படம் எப்போதாவது தான் கிடைக்கும் என்றும் குஸ்தி கற்றுக் கொண்டால் வாழ்க்கையில் தன்னம்பிக்கை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *