அண்ணாமலை – நயினார் நேரடி மோதல்: தமிழிசை பல்டி; அமித்ஷாவிடம் புகார் 

Advertisements

தமிழக பாஜகவில் உச்சகட்டமாக நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே நேரடி மோதல் வெடிக்க தொடங்கி இருக்கிறது இது சம்பந்தமாக அமித்ஷாவிடம் புகார் செய்யப்பட்ட நிலையில் நைனார் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்ற நாள் முதல் அவருக்கும் அண்ணாமலைக்கும் இடையே திரை மறைவு மோதல்கள் நடைபெற்று வருகின்றன இந்த நிலையில் தற்பொழுது திருப்பரங்குன்றம் தீப விழா தொடர்பாக இருவருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே டெல்லியில் இருக்கும் பாஜக மேல் இட தலைவர்களுக்கு தற்பொழுது தமிழக பாஜக செயல்பாடுகள் குறித்து அதிருப்தி நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு நிலவி வருகிறது.இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை மாநில பாரதிய ஜனதா கட்சி முறையாக கையாள வில்லை இதனால் பாரதிய ஜனதா கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்ற புதிய சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது.

திருப்பரங்குன்றம் தீப விழா தொடர்பாக அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் பேசும் பொழுது அந்த மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது சிக்கந்தர் தர்கா நெல்லி தோப்பு தர்கா ஆகியவற்றுக்கு செல்லும் மூன்று பாதைகள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது என குறிப்பிட்டு இருந்தார்.இந்த விவகாரத்தில் நைனார் நாகேந்திரன் மிகப்பெரிய போராட்டத்திற்கு தலைமை தாங்கி கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் பாரதிய ஜனதா கட்சி மாநில அளவில் தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆனால் நயினார் நாகேந்திரன் இதனை சரியாக கையாள தவறிவிட்டார் என அண்ணாமலை ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.பொது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கிடைத்த பெரிய வாய்ப்பை பாரதிய ஜனதா கட்சி இழந்ததாகவும் இதனால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அண்ணாமலை ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக நைனார் நாகேந்திரன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக எழுதிய கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை அனுப்பி இருக்கிறார்.அதில்  தேர்தல் நெருங்கும் சமயத்தில் தமிழக பாஜகவின் புகழுக்கு எதிர்மறையான தாக்கத்தை நைனார் நாகேந்திரன் ஏற்படுத்தி விட்டார் திருப்பரங்குன்றம் விவகாரத்தை நைனார் நாகேந்திரன் சரியாக கையாளவில்லை இதனால் தமிழகத்தில் உள்ள பாஜக கட்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என ஒரு ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறார்.இந்த ரிப்போர்ட் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை இடம் பேசி இருக்கிறார். அப்பொழுது நயினார் நாகேந்திரன் மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் மேலும் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி அண்ணாமலைக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்

அவரோடு இணைந்து பணியாற்றும் படி தமிழிசை சௌந்தரராஜனுக்கும் ஒரு உத்தரவு பறந்து இருக்கிறது இதன் மூலம் தற்பொழுது தமிழிசை சௌந்தரராஜன் நயினார் நாகேந்திரன் பக்கம் இருந்து அண்ணாமலை பக்கமாக பல்டி அடித்திருக்கிறார்.இதனால்மிகவும் கோபமடைந்த நைனார் நாகேந்திரன் அண்ணாமலையை கைபேசியில் அழைத்து நான் என்ன தவறு செய்து விட்டேன் என்று டெல்லி மேல் இடத்திற்கு புகார் தெரிவித்து இருக்கிறீர்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தை இதற்கு மேல் கையாண்டால் ஏதாவது கலவரம் ஏற்பட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு களங்கம் ஏற்பட்டு விடும் என்பதை ஏன் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை தமிழக பாஜக தலைவர் பதவியை பெறுவதற்காக நீங்கள் இப்படி முயற்சி செய்கிறீர்களா என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

இதன் மூலம் தற்பொழுது நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே நேரடியான மோதல்கள் தொடங்கியுள்ளன.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலை பக்கம் இருப்பது தான் தற்போதைய அரசியலில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது .இதற்கிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வமும் அண்ணாமலையும் ஒரு திருமண விழாவில் ஒன்றாக சந்தித்து  பேசி இருக்கிறார்கள். அப்பொழுது ஒருவரை ஒருவர் சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்து கொண்டதுடன் சில நிமிடங்கள் ரகசியமாக பேசினார்கள்  என்பதும் முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *