நத்தத்தில் தொடங்கும் TNPL 2026 .. சென்னை சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி.!

Advertisements
10ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்குகிறது. 10ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டி இன்று தொடங்கி, இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்ட போட்டிகள் இன்று முதல் 18ஆம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2ஆவது கட்ட போட்டிகள் வருகின்ற 18ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகிறது.
இதில், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், முன்னாள் சாம்பியன்களான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 10ஆவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், முன்னாள் சாம்பியனான திண்டுக்கல் டிரா கன்சை எதிர்கொள்கிறது. இதில், திருப்பூர் தமிழன்ஸ் அணியின் கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான வீரர்களும்,  திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் தலைமையிலான வீரர்களும் பங்கேற்கின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், திண்டுக்கல் அணி 7 முறையும், திருப்பூர் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
எனவே, இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *