இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் தில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!

Advertisements

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைகள் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகள் தலைமைப் பயிற்சியாளர் ஆமோல் மஜும்தாருடன் மும்பையில் இருந்து தனிப் பேருந்தில் தில்லிக்குச் சென்றனர். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்துக்குச் சென்று அவரிடம் வெற்றிக் கோப்பையைக் காட்டி வாழ்த்துப் பெற்றனர்.

அதன்பின்னர் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர்கள் கலந்துரையாடினர். அப்போது வீராங்கனை ஒருவர் உங்கள் மேனிப் பராமரிப்புப் பற்றிக் கூறுங்கள் என்றார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, தான் அதற்காகத் தனிக்கவனம் செலுத்தவில்லை என்றும், 25 ஆண்டுகளாக ஆட்சியின் தலைவராக இருந்து வரும் நிலையில், மக்களின் வாழ்த்துக்களால் தன் மேனி பொலிவாக இருப்பதாகத் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *