
இந்தியாவை மிகப்பெரிய போர்க்களமாக்கி காட்டிய அயோத்தியில் மீண்டும் புதிய மசூதி கட்டப்படுகிறது இதற்காக இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் நன்கொடைகளை பெறப்பட்டு அடுத்த ஆண்டு மசூதி உதயமாகிறது இதே வேளையில் தமிழ்நாட்டில் காஞ்சி சங்கர மடத்தில் தான் ராமாயண காலத்து வில்லன் ராவணன் பிறந்தான் எனவே உடனடியாக சங்கர மடத்தை இடிக்க வேண்டும் என்றபுதிய சர்ச்சையும் ஏற்பட்டு இருக்கிறது.
வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னராக ராவணன் சித்தரிக்கப்படுகிறார். ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்திச் செல்வது ராமாயணத்தில் முக்கிய காட்சியாகும் இது தவிர ராவணனுக்கு கும்பகர்ணன் வீடனன் சூர்ப்பனகை ஆகிய சகோதரன் சகோதரிகள் பற்றிய கதைகளும் உண்டு செல்வத்தை அள்ளித்தரும் குபேரன் இராவணனின் ஒன்றுவிட்ட அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவணன் சிவனுடைய தீவிர பக்தர் ஆவார். வடமாநிலத்தவர்கள் இவரை கடவுளாக கொண்டாடுகிறார்கள்.பொதுவாக ராவணன் பிறந்த இடம் குறித்து பல்வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன அவர் இலங்கையை ஆண்ட மன்னர் என்றாலும் அவர் பிறப்பிடம் உத்திரபிரதேசத்தில் உள்ள பிஸ்ராத் கிராமம் என்று பலரும் நம்புகிறார்கள் சிலர் நேபாளத்தில் பிறந்தவர் என்கிறார்கள் அதே வேளையில் ராவணன் காஞ்சிபுரத்தில் பிறந்ததாகவும் கூறுகிறார்கள்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் உள்ள பிரபலமான சங்கர மடத்துக்கு கீழே ராவணன் பிறந்த இடம் இருக்கிறது என்கிறார்கள்.இந்த சூழ்நிலையில் இந்தியா முழுவதும் ஆன்மீக பக்தர்கள் கோயிலாக கருதப்பட்டு வரும் சங்கர மடத்தை இடிக்க வேண்டும் அதன் கீழே இராவணன் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என புதிய போர்க்குரல் கிளம்பி இருக்கிறது.வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி சங்கர மடத்தை முற்றுகை இட போவதாக தமிழ் தேசிய கூட்டணி என்ற கட்சி அறிவித்திருக்கிறது.
இந்த கட்சி சார்பில் கருத்து தெரிவிக்கும் பொழுது ராமர் அயோக்கியன் பிறந்ததை நம்ப வேண்டும் என்றால் ராவணன் பிறந்த இடம் தமிழ்நாடு என்பது இல்லாமலா போகும். காஞ்சியில் உள்ள சங்கர மடத்தின் கீழே அகழ்வாராய்ச்சி செய்தால் உண்மை உலகுக்கு வெளியே வரும் ராமன் பிறந்த இடம் அயோத்தியில் பாபர் மசூதியின் கீழே என உச்சநீதிமன்றம் நம்பும்போது காஞ்சிபுரத்தில் சங்கர மடத்திற்கு கீழாக ராவணன் பிறந்த இடம் என்பதை ஏன் நம்ப கூடாது காஞ்சி மரத்தை தமிழர்களிடம் ஒப்படைத்துவிட்டு சங்கராச்சாரியார் அவரது பூர்வீக ஊரான ஆந்திராவிற்கு சென்று தங்குவது நல்லது வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி ராவணனுக்கு காஞ்சியில் கோட்டம் எழுப்ப உறுதிபூணுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்போடு மே 17 இயக்கம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவையும் இணைந்து புதிய போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் என்பது முக்கிய செய்தியாகும்.இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய மசூதி கட்டும் பணி தொடங்கப்பட உள்ளதாக அந்த மசூதி அறக்கட்டையின் தலைவர் தெரிவித்து இருக்கிறார்.அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அங்கு கடந்த ஆண்டு ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த நிலையில் அயோத்தில இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் கிராமத்தில் புதிய மசூதி கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தலைவர் ஜூபர் பரூக்கி தெரிவித்திருக்கிறார் சுமார் 45 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் இந்த மசூதிக்கு தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கான ஒப்புதல்களை மத்திய அரசிடமிருந்து ஸபெறுவதற்காக முயற்சி செய்து வருகிறார்கள்.இதற்கான அனைத்து தகவல்களும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே திருப்பரங்குன்றத்தில் உள்ள இஸ்லாமிய தர்காவை அகற்றுவதற்காகதாதான் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி சார்பில் போராட்டங்கள் வெடித்து இருக்கின்றன இந்த குற்றச்சாட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது



