Nellai:பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!

Advertisements

மாணவியின் ஆபாச படங்களைச் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாகப் போலீஸ்காரர் மிரட்டியுள்ளார்.

நெல்லை:நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த கலைச்செல்வன். இவர் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். இதற்காக அவர் நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏர்வாடி போலீஸ் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் ஆனந்த கலைச்செல்வன் 17 வயதுடைய பிளஸ்-2 மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவியின் பெற்றோர், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஆனந்த கலைச்செல்வன் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அந்த மாணவியின் ஆபாச படங்களை எடுத்து வைத்துக்கொண்டு அதனைச் சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிப் பணம் பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார், ஆனந்த கலைச்செல்வன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *