Advertisements

அமெரிக்க தாக்குதல்கள் தீவிரமடைவதை தவிர்க்க ஈரானுக்கு கடைசி வாய்ப்பு என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது மற்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த அமெரிக்காவின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழியை உருவாக்குவது ஆகியவற்றில் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்று கூறினார்.
பேச்சுவார்த்தைகளின் நிலை குறித்த தகவல்கள் “இன்றோ அல்லது நாளையோ” தெரியவரும் என்று தெரிவித்தார். “முதல் கட்டம் நீரிணையை திறப்பதாகும், இரண்டாவது கட்டம் அணு ஆயுத ஒழிப்பாக இருக்கும், அதற்கு சிறிது காலம் எடுக்கும் என்று கூறினார்.
வளைகுடா நாடுகளான கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், ஈரானுக்கு எதிராக புதிய பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த அமெரிக்க படைகளுக்கு உத்தரவிடுவதை தள்ளிவைக்க முடிவு செய்ததாகத் தெரிவித்தார்.
ஆனால், ஈரான் மீதான தனது பொறுமை குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
Advertisements



