Advertisements

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் ஒரு புதிய சர்வே ரிப்போர்ட் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும். தற்போதைய சூழ்நிலையில் உதயநிதிக்கும் நடிகர் விஜய்க்கும் செல்வாக்கு எப்படி இருக்கிறது என அதிர்ச்சி கலந்த பல தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.
திமுக தரப்பில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? வருகிற தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை சேகரித்து மேல் இடத்திற்கு சொல்வதற்காக ஒரு ஐடி விங் தனியாக செயல்பட்டு வருகிறது.இந்த ஐடி விங் தற்பொழுது புதிதாக தமிழ்நாடு முழுவதும் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவை முதல்வர் மு க ஸ்டாலின் மேஜைக்கு அனுப்பி இருக்கிறது.அந்த அறிக்கையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக தான் வெற்றி பெறும். தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும். திமுகவுக்கு மெஜாரிட்டி வாக்குகள் கிடைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கலாம் என்றும் மேலும் கடந்த தேர்தலை ஒப்பிடும்பொழுது கட்சியின் வாக்கு சதவீதம் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அந்த ஆய்வு அறிக்கை மு க ஸ்டாலினை எச்சரித்து இருக்கிறது.இந்த வாக்கு சரிவுக்கு காரணம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் தான் என்றும் அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.முன்னதாக 15 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என்ற நிலையில் இருந்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு தற்போது 20% வாக்குகள் பெற வாய்ப்பு இருப்பதாகவும் இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவு விஜய்க்கு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தின் எழுச்சி என்பது திமுக அதிமுக நாம் தமிழர் பாஜக என அனைத்து கட்சிகளையும் பாதிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் திமுக தரப்பில் உள்ள வாக்கு வங்கியையும் தமிழக வெற்றி கழகம் பெற வாய்ப்பு இருக்கிறது என அந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டு இருக்கிறது.இது மட்டுமல்லாமல் திமுகவில் பல மாவட்டங்களில் கடுமையான உள் கட்சி மோதல்கள் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக சென்னை கோவை மதுரை நெல்லை மற்றும் பல வட மாவட்டங்களில் உள்கட்சி மோதல்கள் இருப்பதாக அந்த ஆய்வு அறிக்கை மு க ஸ்டாலினை எச்சரித்து இருக்கிறது.
இதற்கிடையே வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடைபெறும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் ஏதாவது கூட்டணி அமைப்பதன் மூலம் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் விஜயை விட உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்புகளும்ஆதரவும் குறைந்த அளவே இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த ஆய்வு அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் சீரியசாக எடுத்து இருப்பதாக சொல்கிறார்கள்.இதன் நிமித்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சித் தலைவர்கள் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் கொண்ட ஒரு ரகசிய ஆய்வு கூட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி இருக்கிறார்.
அதில் புதிய ஆய்வு அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்று இருக்கிறது.மாவட்ட அளவில் உள்கட்சி மோதல்கள் இருக்குமானால் அது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் கருதுகிறார் எனவே உள்கட்சி பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும் என அவர் முக்கிய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார் விரைவிலேயே இது தொடர்பாக மாநில அளவில் அவர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி கட்சி ஒற்றுமையை நிலை நாட்டுவதற்கான பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் பொதுமக்களுடன் நல்ல தொடர்பில் இருந்தால் தமிழக வெற்றி கழகத்தின் சவால்களை சமாளித்து விட முடியும் என திமுக நம்புகிறது. எனவே கட்சி தொண்டர்களை பொதுமக்களுடன் நல்ல நட்பில் இருக்கும் படியாக தனியாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தவும் திமுக மேலிடம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.புதிய ஆய்வறிக்கையில் சில மகிழ்ச்சியான வெற்றி தகவல்கள் இருந்தாலும் பின்னடைவான தகவல்களை மு க ஸ்டாலின் முக்கிய சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறார் என்பது முக்கிய செய்தி ஆகும்.
Advertisements



