
சுதந்திர போராட்ட தியாகி அஞ்சலை அம்மாள் நினைவுத் தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதற்கான நிகழ்வில் கடலூர் மாவட்டம் முதுநகரில் உள்ள அஞ்சலை அம்மாள் சிலைக்குப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே நேரத்தில், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மரியாதை அளித்தார்.
மேலும், சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில், அஞ்சலை அம்மாள் சிலைக்குத் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சுதந்திர போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அஞ்சலை அம்மாள் 64 ஆம் ஆண்டு நினைவஞ்சலி, தவெக தலைவர் விஜய் அஞ்சலி…#TVKVijay #TVK pic.twitter.com/R0GXDBVloB
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) February 20, 2025
