
சென்னை ஷெனாய் நகரில் வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை செயலாளர் ஐஏஎஸ் அதிகாரி அமுதா கூறுகையில்,
* ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் நபர்களுக்குப் பட்டா வழங்குவதற்கான அறிவுறுத்தலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
* தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
* இதுவரை சென்னையில் 60,000 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.
* சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 86,388 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
