
முதலமைச்சர் விஜய் தனது தோழமை கட்சியுடன் பேசி மேகதாது அணைப் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட அணை நீர் பிரச்சினைகளை வைத்து இதற்கு முந்தைய அரசு அரசியல் மட்டும் தான் செய்ததே தவிர, தீர்வு காணவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுடன் பலமுறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் எவ்வித பலனுமில்லை என்று சூட்டி காட்டியுள்ளார். மேகதாது அணையை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி, மறைமுக அனுமதி வழங்கியிருப்பதைப் போல, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் கூட்டணிக் கட்சி தலைவரான வைகோ போன்றவர்கள் பொய் பரப்புரைகளை செய்து கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று குற்றம் சாட்டினார்.
முதலமைச்சர் விஜய் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் பேசி, காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கேரளா மாநில முதல்வர்களின் ஒத்துழைப்போடு, இந்த அணைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார்.



