Mumbai : கடல்சார் மாநாட்டைத் தொடக்கி வைத்தார் – அமித் ஷா!

பதினோராயிரம் கிலோமீட்டர் நீளக் கடற்கரையைக் கொண்டிருப்பதும், இந்தியாவின் அமைவிடமும் நம் கடல்சார் வலிமைக்குச் சான்றாகும் ன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 13 கடலோர மாநிலங்கள் உள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடு கடல்சார் வணிகத்தால் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

மும்பையில் இந்திய கடல்சார் வார விழாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குத்து விளக்கேற்றித் தொடக்கி வைத்தார். மத்திய அமைச்சர்கள் சர்வானந்த சோனோவால், சாந்தனு தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குஜராத், மகாராஷ்டிரம், கோவா, ஒடிசா மாநில முதலமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவின் கடல்சார் அமைபு, ஜனநாயக நிலைத்தன்மை, கடற்படை வலிமை ஆகியன இந்தோ பசிபிக், தென்கோள மண்டலங்களில் வளர்ச்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழலைக் கட்டமைப்பதில் ஒரு பாலமாகத் திகழ்வதாகத் தெரிவித்தார். இந்தியாவின் கடல்சார் வரலாறு ஐயாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனக் குறிப்பிட்டார்.

சிந்து ஆற்றுத் துறைமுகமான லோதாலில் இருந்து எகிப்துக்குப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கடல் வணிகத்துக்குச் சான்றாக மும்பையில் இந்தியாவின் நுழைவாயில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவின் நுழைவாயிலை உலகின் நுழைவாயிலாக மாற்றுவதற்கான மாநாடு தான் இது என்றும் தெரிவித்தார்.

பதினோராயிரம் கிலோமீட்டர் நீளக் கடற்கரையும், இந்தியாவின் அமைவிடமும் அதன் கடல்சார் வலிமைக்குச் சான்றாகும் எனக் குறிப்பிட்டார். இந்தியாவில் 13 கடலோர மாநிலங்கள் உள்ளதாகவும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 விழுக்காடு கடல்சார் வணிகத்தால் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலோரத்தில் உள்ள 28 நாடுகள் உலக ஏற்றுமதியில் 12 விழுக்காட்டைக் கொண்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *