‘மொந்தா’ புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா..? வெளியான முக்கிய தகவல்!

Advertisements

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மொந்தா புயல் நாளை காலை தீவிரப் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நள்ளிரவு 1.30 மணியளவில் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை 8.30 மணி நிலவரப்படி, மொந்தா புயல், சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் 560 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. ஆந்திராவை நோக்கி மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் இந்த புயல், நாளை காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் எனவும், பின்னர், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா அருகே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

மொந்தா புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், மொந்தா புயல் காரணமாக, சென்னையில் இன்று நாள் முழுவதும் மிதமான மழை பெய்யலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *