ஓய்வு பெறுகிறார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்..!

Advertisements

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23ஆம் நாள் ஓய்வுபெற உள்ள நிலையில், தனக்குப் பின் தலைமை நீதிபதி பதவிக்கு நீதிபதி சூர்யகாந்தை அவர் பரிந்துரைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் நவம்பர் 23ஆம் நாள் ஓய்வுபெற உள்ளார். அவர் ஓய்வுபெற்ற மறுநாளில் புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்க வேண்டும்.

அதற்காக ஒருவரின் பெயரை அவர் சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரைப்பது வழக்கம். இந்நிலையில் தனக்குப் பின் புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்தை நியமிக்கலாம் என்று சட்ட அமைச்சகத்துக்குக் கவாய் பரிந்துரைத்துள்ளார்.

1962ஆம் ஆண்டு பிப்ரவரி பத்தாம் நாள் பிறந்த சூர்யகாந்த், இந்த ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்பார் என்றும், அவர் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9 வரை 15 மாதங்கள் பதவியில் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *