பெண்கள் மருத்துவம் படிக்க தடை – கிரிக்கெட் வீரர் ரஷித் கான்!

Advertisements

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

இவை அனைத்தும் பெண்களைச் சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளைப் பெண்கள் பயிலத் தாலிபான் அரசுத் தடை விதித்துள்ளது.

இந்நிலையில் தாலிபான் அரசின் இந்தத் தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், “கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாகப் பாதித்துள்ளது.

நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாகப் பாதிக்கிறது.

ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *