இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸில் நம்பர் ஒன்.. CSK-வை பின்னுக்கு தள்ளிய அணி எது தெரியுமா?

Advertisements

ஐபிஎல் அணிகளில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட அணி எது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வி அடைந்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளன.

தரவரிசை பட்டியலில் மும்பை, ஆர்.சி.பி, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. இவை ஒரு பக்கம் இருந்தாலும் சமூக வலைதளங்களில் ஐபிஎல் அணிகள் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சில ஐபிஎல் அணிகளுக்கு இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ் உள்ளனர்.இதில் 19.3 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதிக ஃபாலோயர்ஸ் கொண்ட அணியாக மாறியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. சென்னை அணிக்கு 18.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். மும்பை அணிக்கு 17.3 மில்லியன் ஃபாலோயர்ஸும், கொல்கத்தா அணிக்கு 7.4 மில்லியன் ஃபாலோயர்சும் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5.4 மில்லியன், ராஜஸ்தான் ராயல்ஸ் 5.1 மில்லியன், குஜராத் டைட்டன்ஸ் 4.8 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 8-ஆவது இடத்தில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 4.6 மில்லியன் ஃபாலோயர்சும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 4 மில்லியனும், லக்னோ அணிக்கு 3.6 மில்லியன் ஃபாலோயர்சும் உள்ளனர்.இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக ரசிகர்களை கொண்ட அணியாக பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *