Advertisements

பாரத பிரதமர் மோடி மிகச் சிறந்த கொலைகாரர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய பேச்சு உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது . அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற காலம் முதல் தொடர்ந்து இந்தியாவுடன் மறைமுக மோதல் நடைபெற்று வருகிறது . உச்சகட்டமாக அதிகபட்ச வரியை விதித்து இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதிக்கு சாவு மணி அடிக்கும் வகையில் நடந்து கொண்டார் .
அதே சமயம் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசுவதிலும் குறை வைக்காமல் அவ்வப்போது பாராட்டி வருகிறார் . பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபற்றும் நட்புறவுடன் தொலைபேசியில் பேசி வருவதும் அவ்வப்போது செய்தியாக வெளிவருகிறது.
இந்த நிலையில்தான் , இந்திய பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் நரகத்தை விட மோசமானவர் என ட்ரம்ப் பேசிய பேச்சு உலக நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது .
தென்கொரியாவில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசினார். அவர் பேசும் பொழுது இந்தியாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய இருக்கிறேன். பிரதமர் மோடி மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உள்ளது .எங்களுக்குள் ஒரு நல்ல உறவும் இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் பிரதமரும் ஒரு சிறந்த மனிதர் அவர் சிறந்த போராளி இருவருக்கிடையுமான போரில் ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன .
நான் இருவரையும் அழைத்து போரை நிறுத்தாவிட்டால் அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய முடியாது என்று கூறினேன். ஆனால் அவர்கள் இருவரும் போரை நிறுத்த முடியாது என்று கூறினார்கள் . அவர்கள் இருவருமே வலிமையான மனிதர்கள்
பிரதமர் மோடி சிறந்த மனிதர். ஆனால் அவர் ஒரு கொலைகாரர் நரகத்தை விட மோசமானவர் நாங்கள் போரிடத்தான் செய்வோம் என்று பிரதமர் மோடி என்னிடம் கூறினார்.
இருந்தபோதிலும் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் என்னை அழைத்ததுடன் போரையும் நிறுத்திக் கொண்டனர் . பிரதமர் மோடி மிகவும் கெடுபிடியானவர் . அவரிடம் நான் பேசும் பொழுது நீங்கள் நான் பார்த்த அதே கெடுபிடியான நபர் தான் என்றேன். அது மட்டுமல்லாமல் நீங்கள் போரை தொடர்ந்தால் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்றேன் இதையேதான் பாகிஸ்தான் அரசிடமும் சொன்னேன என்று பேசியிருக்கிறார்.
முன்னதாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பேசும் போதும் இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் இந்த போரில் ஏழு அழகிய புதிய விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்றார் . பிரதமர் மோடியை கொலைகாரர் என அமெரிக்க அதிபர் ் வர்ணித்து பேசியது உலக நாடுகள் முழுவதிலும் உள்ள பத்திரிகைகளில் முக்கிய தலைப்புச் செய்தியாக வெளிவந்துள்ளது. இது மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் இந்த செய்தி வேகமாக பரவி வருகிறது .
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சின் பின்னணியில் முதலாவதாக தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் நாடுதான் காஷ்மீரில் உள்ள பகல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் . இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர் . இதற்கு பதிலடியாகத்தான் இந்தியாவின் முப்படைகளும் சேர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள ஒன்பது தீவிரவாதிகள் முகாம்கள் மற்றும் விமானத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதல் மே மாதம் ஏழாம் தேதி தொடங்கி 10ஆம் தேதிக்குள் முடிந்து விட்டது பாகிஸ்தான் தரப்பும் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சி மேற்கொண்டன. இருப்பினும் அதனை இந்திய பாதுகாப்பு படை இடைமறித்து அழித்தது இதன் பின்னர் இரு தரப்புக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது .
இந்தப் போர் நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பினர் தலையீடு இல்லை என்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மோடி பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தப்பட்டது என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போரை தடுத்து நிறுத்தியது நான்தான் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அது மட்டுமல்லாமல் தற்பொழுது பிரதமர் மோடியை பார்த்து கொலையாளி என்று குறிப்பிட்டிருப்பதும் அவர் நரகத்தை விட மோசமானவர் என்று பேசி இருப்பதும் உலக நாடுகள் முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது .
குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் இதற்கு கண்டனங்கள் தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள் .
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும் முற்றிலும் மோசமான வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியிருக்கிறார் . இதுபோல் உலக நாடுகளில் எந்த அரசியல் தலைவரும் கீழ்த்தரமாக பேசியதில்லை ட்ரம்ப் மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார் என அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் .
இருந்த போதிலும் இது தொடர்பாக பிரதமர் மோடி தரப்பில் பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. பாகிஸ்தான் மீது போர் தொடுத்த காரணத்திற்காக பாரத பிரதமர் மோடியை கொலையாளி என்று குறிப்பிட்டால் உலக நாடுகளில் எத்தனையோ நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய யுத்தங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்களை பற்றி ஏன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசவில்லை.
உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருவதால் அதனை பொறுத்துக் கொள்ளாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்பொழுது இது போல பேசி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.
Advertisements


