சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு தேசிய விருது – முதலமைச்சர் பாராட்டு..!

இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தளப்பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள மாநகரப் போக்குவரத்து கழகத்துக்கும் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள் தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் மாநகர போக்குவரத்து கழகத்தின் பணிகள் மேம்மேலும் சிறந்திட தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *