
கடந்த 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகரும் கேப்டன் என புகழ் பெற்ற வருமான விஜயகாந்த் தலைமையில் தேமுதிக என்ற கட்சி உருவானது.
கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும் மீதமுள்ள கடையநல்லூர் திருநெல்வேலி ஆகிய தொகுதிகளில் மோதிரம் சின்னத்திலும் போட்டியிட்டது .
இந்த தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்ட கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார். இருந்த போதிலும் மூன்று தொகுதிகளில் 20 சதவீத வாக்குகளையும் எட்டு தொகுதிகளில் 15 முதல் 20 வரைவிலான வாக்கு வங்கிகளையும் 33 தொகுதிகளில் 10 முதல் 15 வரையிலான வாக்குகளையும் 48 தொகுதிகளில் ஏழு முதல் 10 வரையிலான வாக்குகளையும் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றார்கள்.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 49 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது இதில் 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை தோற்கடித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார்.
இதன் மூலம் தேமுதிக தமிழக அரசியலில் முக்கியமான கட்சியாக உருவெடுத்தது அந்த தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9% வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்தன . இதன் பின்னர் அதிமுகவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது.
இதன் பின்னர் நடைபெற்ற 16 வது மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி போட்டு 14 தொகுதியில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. அதோடு தேமுதிக வாக்கு வங்கி ஆறு புள்ளி ஒன்று என்ற அளவுக்கு குறைந்தது.
இதன் பின்னர் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து 2016 சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார் . இந்த தேர்தலில் 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது.
இதே போல் திருச்செந்தூர் வந்தவாசி திருமங்கலம் பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக அனைத்திலும் தோல்வியை சந்தித்தது.இந்த நிலையில் வருகிற தேர்தலில் ஏதாவது வெற்றி கூட்டணியுடன் இணைந்து. கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டிய நிலைமையில் தற்போதைய பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டு வருகிறார்.
கடந்த ஐந்து மாதங்களாக திமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்பொழுது தேமுதிக கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு பேச்சு வார்த்தைகள் முடிவடைந்து விட்டன . தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு அடுத்த முதலமைச்சர் போட்டிக்கு தமிழக தேர்தல் களத்தில் பலத்த யுத்தம் ஏற்பட்டு வருகிறது. தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் தவிர எப்படியும் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மும்முரமாக பணிகள் நடத்தி வருகிறார்.
நானும் முதலமைச்சர் ஆகிவிடுவேன் என நடிகர் விஜய்யும் இந்த தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறார். இவர்களுடன் சீமானின் நாம் தமிழர் கட்சியும் சேர்ந்து நான்கு முனை போட்டி நிலவுமென தெரிகிறது. தற்பொழுது மெகா கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார் என்றாலும், பாரதிய ஜனதா கட்சியைத் தவிர வேறு முக்கிய கட்சிகள் எதுவும் இதுவரை அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் என உறுதி அளிக்கப்பட்டது ஆனால் ராஜ்யசபா எம்பி தேர்தலில் தேமுதிகவுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லைஇந்த நிலையில் அதிமுக தொடர்ந்து தோல்வி பெறுவதால் ஏதாவது வெற்றி கூட்டணியில் இணைந்து தேமுதிக கட்சிக்கு அங்கீகாரம் பெற வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார்
அதிமுகவுடன் நிச்சயமாக கூட்டணி இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதே போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவரும் மறுத்து விட்டார். தற்பொழுது தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என எடுத்துவரும் முயற்சிகளுக்கு நடிகர் விஜய் செவிசாய்க்கவில்லை.
இந்த நிலையில் திமுக கூட்டணியை பலப்படுத்தி விட்டால் அதிமுகவை எளிதாக தோற்கடித்து விடலாம் என்ற புதிய வியூகம் திமுக தரப்பில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய தலைவர்களான டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரை திமுகவுடன் இணைத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து இதற்கான திரை மறைவு பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணி வாய்ப்பு இல்லாத நிலையில் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் திமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திமுக அல்லது தமிழக வெற்றி கழகம் ஆகிய ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என ஏற்கனவே பிரேமலதா விஜயகாந்த் முடிவு செய்திருந்தார் இதனால் இருபக்கமும் காய்களை நகர்த்தி வந்தார்.
தற்பொழுது கரூர் சம்பவத்திற்கு பிறகு பிரேமலதா விஜயகாந்த் வியூகம் மாறி இருக்கிறது வருகிற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் எந்த அளவிற்கு வெற்றி பெறும் என்பது சந்தேகமாகிவிட்ட நிலையில் கடந்த மாதம் திமுகவுடன் கூட்டணி சேர்வது என இறுதி முடிவு எடுத்து விட்டார்.
இது தொடர்பாக திமுக மேல் இடத்தில் அவர் பேசி வந்தார் தனக்கு 15 தொகுதிகள் தரப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் பேச்சுவார்த்தை இழுபரியாக நீடித்து வந்தது.
தற்போதுதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு எட்டு தொகுதிகள் தரலாம் என பேசப்பட்டு அதற்கு பிரேமலதா விஜயகாந்த் சம்பந்தம் தெரிவித்திருக்கிறார். எட்டு தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதி தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் தெரிய வந்திருக்கிறது.
இதற்கிடையே தேமுதிகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என விஜய் திட்டமிட்டு வந்தார் காரணம் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கும் பொழுது முதலமைச்சர் வேட்பாளரில் எந்தவித பிரச்சனையும் இல்லை . இது தவிர பிரேமலதா விஜயகாந்த் நல்ல பிரச்சார பீரங்கியாக செயல்படுவார் .
மேலும் , தற்பொழுது கேப்டன் விஜயகாந்த் மீது மிகப்பெரிய அனுதாப அலை இருக்கிறது. விஜயகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்வார்கள் எனவே அந்த வாக்கு வங்கி தனக்கு வந்து சேரும் என்று ஒரு கணக்குப் போட்டு இருந்தார்.
இதன் அடிப்படையில் தான் அவர் சமீப காலமாக விஜயகாந்தை புகழ்ந்து பேசி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் இணையப் போகுகும் தகவல் தெரிந்து அவர் ஏமாற்றத்தில் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே வருகிற ஜனவரி மாதம் தனது கூட்டணிமுடிவை தெரிவிப்பேன் என்று கூறிவந்த பிரேமலதா விஜயகாந்த் தற்போது அதற்கு முன்னதாகவே திமுகவுடன் கூட்டணி என்ற தகவலை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.




