இந்தியாவிற்கு மட்டும் வரி விதித்ததுக் குறித்து அமெரிக்கா விளக்கம்

இந்தியாவிற்கு மட்டும் வரி விதித்ததுக் குறித்து பலர் கேள்வி கேட்ட நிலையில், அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் உள்ள நிலையில், இந்தியாவிற்கு மட்டும் அமெரிக்கா வரி விதித்துள்ளது. இதனைப் பலர் கேள்வி கேட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ விளக்கம் அளித்துள்ளதுள்ளார்.

இதில் இந்தியாவை போல சீனா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாக உயரும் என்று கூறினார்.

இந்நிலையில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அமெரிக்க செனட் மசோதாவை உருவாக்கும் போது ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் ஆக்கப்பூர்வமாக உள்ளனர் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *