
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது .
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஏழு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ரஷ்யா,உக்ரைன் போர் எப்போது முடிவடையும் என்று என்னால் சொல்ல முடியாது, ரஷ்ய அதிபர் புதினும் அதை முடிக்க விரும்புகிறார் என்று கூறினார்.
மேலும், இதுவரை 6 போர்களை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். அது போல, ரஷியா,உக்ரைன் போரையும் நாங்கள் முடிவுக்குக் கொண்டுவருவோம் என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அருகில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இருந்தார். இந்தியா, பாகிஸ்தான் வர்த்தக தடைகளை வைத்து மிரட்டி இரு நாட்டு தலைவர்களையும் போரை நிறுத்தியதாக டொனால்டு டிரம்ப் இதுவரை 25 முறைக்கும் மேலாக கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


