தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழ் அடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதைத் தொடர்ந்து, வருகின்ற 17 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், தென் தமிழகக் கடலோரப் பகுதிகளான கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *